துறவிகளாக பல்கலைக்கழகத்திற்குள் நுழைவோர் சாமானியர்களாக வெளியேறுவதாக ரணில் ஆதங்கம்
துறவிகளாக பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்கும் பெருமளவிலான மக்கள் சாமானியர்களாக அங்கிருந்து வெளியேறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (29.11.2022) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இன்று பெருமளவிலான மக்கள் துறவிகளாக பல்கலைக்கழகங்களுக்குள் நுழைகிறார்கள். ஆனால் இறுதியில் சாமானியர்களாக மாறுகிறார்கள்.
சமூகத்தின் ஒழுங்கு

ஆரம்பத்தில், நாம் துறவிகளாக பல்கலைக்கழகத்தில் நுழைந்தால், அது மாற்றப்படாது என்று முடிவு செய்ய வேண்டும்.
அத்துடன் துறவிகள் தமது அங்கியை கழற்ற வேண்டும் என்றால் அவர்கள் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
இந்தநிலையில் தற்போதுள்ள முறை தொடர்ந்தால், இலங்கையின் சமூகத்தின் ஒழுங்கு பறிபோகும் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri