குரங்குகளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் முயற்சி தோல்வி!
குரங்குகளுக்கு குடும்ப கட்டுபாடு செய்யும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயிர்ச் செய்கைகளுக்கு குரங்குகளினால் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளின் இனப்பெருக்கத்தை தடுக்க குடும்ப கட்டுபாடு செய்யும் திட்டமொன்று பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
அதிக செலவு
மாத்தளை மாவட்டம் ஹரஸ்கம பிரதேசத்தில் இந்த பரீட்சார்த்த திட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், இந்த பரீட்சார்த்த திட்டம் தற்பொழுது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான மிருக வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு மற்றும் கிரிதலே மிருக வைத்திய சிகிச்சை நிலையத்திற்கு குரங்குகளை போக்குவரத்து செய்வதில் ஏற்படும் அதிக செலவு போன்ற காரணிகளினால் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் இணைப்புக் குழுவின் தலைவர், பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான சாதனங்களுக்காக மட்டும் 12 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)