காய்ச்சல், தலைவலியுடன் உடல் முழுவதும் பரவும் கொப்புளங்கள்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை குரங்கம்மை வைரஸ் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் குரங்கம்மை தாக்கம் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, குரங்கம்மை தொற்று மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படும் வைரஸ் மூலம் பரவும் நோய். இது சின்னம்மையை போன்ற அரிய தொற்றுநோய்.
ஆனால் சின்னம்மையைவிட அதன் தாக்கம் சற்று குறைவு. காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை இந்த தொற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்.
குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் தோலின் மேற்புறத்தில் உள்ள உடைந்த உயிரிகள் மூலமாகவும், சுவாசக் குழாய் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.
கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ள மியூகோஸ் திசுக்கள் மூலமாக பரவக்கூடும். எனவே இது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவை அச்சுறுத்தும் குரங்கு அம்மை - மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி |
குரங்கு அம்மை நோய் பாதிப்பை முதன் முறையாக உறுதி செய்தது கனடா |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
