சர்ச்சைக்குள்ளாகும் அநுர அரசு - நாடாளுமன்றில் அடாவடித்தனம் செய்யும் அமைச்சர்
அநுர அரசாங்கத்திலுள்ள சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டினை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கோரிக்கைகளை மீறி, தமது செயற்பாடுகளை தடுக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சியினருக்கு அநீதி
எதிர்க்கட்சியினருக்கு அநீதியாக அமைச்சர் செயற்படுவதாகவும், வகுப்பின் மொனிட்டராக தன்னை நினைத்துக் கொள்வதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, ஹர்ஷ டி சில்வா, சாணக்கியன் ராசமாணிக்கம் மற்றும் பலர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தின் முடிவில் இந்த விடயம் குறித்து தெரியப்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, தெரிவித்துள்ளார்.