முன்னாள் அரசியல்வாதிகளிகளின் தலையீட்டில் வேலைவாய்ப்பு மோசடி
கடந்த இரண்டு ஆண்டுகளில் 5,000ற்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து இஸ்ரேலிய வேலைவாய்ப்பு தொடர்பில் பல்வேறு பண மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அரசியல்வாதிகளிகளின் தலையீட்டில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வேலையை பெற்றுதருவதாக கூறிய சில முன்னாள் அரசியல்வாதிகளுக்கு, அதற்கான பணத்தை குறித்த தரப்பு வழங்கியுள்ளதாகவும், மோசடி நிலை காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் இரண்டு ஆண்டுகளாக வேலைகளைப் பெறுவதற்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய அரசாங்கம்
மேலும், இஸ்ரேலிய அரசாங்கத்தால் நாட்டிற்கு வழங்கப்பட்ட 10,000 வேலைகள் என்ற ஒதுக்கீட்டின் கீழ் அரசியல் காரணங்களுக்காக விவசாயத் துறையில் வேலைக்கு தகுதியற்ற நபர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்புடைய வேலைகளை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றதால் நாடு அந்த வேலை ஒதுக்கீட்டை இழந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 2,000 பேர் அந்த வேலைகளுக்கு அனுப்பப்பட்டாலும், மீதமுள்ள 8,000 வேலைகள் மேற்கூறிய காரணங்களால் இழக்கப்பட்டதாகவும், அதன்படி, இஸ்ரேலிய வேலைகளை வெளிப்படையாக வழங்குவதற்கும், நாட்டில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் மூலம் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |