உயிரிழை அமைப்பில் பண மோசடி: அமைப்பினர் குற்றச்சாட்டு
புலம்பெயர்ந்தவர்களால் வழங்கப்பட்ட 23 கோடி ரூபாய் பணத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக என முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட உயிரிழை அமைப்பின் உறுப்பினர் சா.குகதாசன் உட்பட உறுப்பினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு வொய் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று(25.01.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மோசடிகள்
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, கடந்த 2009 யுத்தத்திற்கு பின்னர் வடக்கு, கிழக்கு என இணைக்கப்பட்ட மாங்குளத்தை மையமாக கொண்டு உயிரிழை அமைப்பு அமைக்கப்பட்டு தலைமை காரியாலயத்தில் உறவுகளாக பயணித்துக் வருகிறோம்.

எங்களுக்கான நிதி வழங்குனர்கள் எங்கள் அமைப்புக்கு வழங்கி நிதி வழங்கி வருகின்றார்கள். இவர்களில் 4 பேர் முள்ளந்தண்டு பாதிப்பால் உயிரிழந்து விட்டனர்.தற்போது சுகயீனமின்றி 20 பேர் இருக்கின்றோம்.
இந்நிலையில், 2022 டிசம்பர் மாதம் தொடக்கம் 31-12-2023 காலப்பகுதியில் ஓராண்டுக்கான கணக்கு அறிக்கையின்படி, 8,80,66,692.90 என சொல்லப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, 2002 தொடக்கம் 2005 வரை இறுதி காலம்வரை 23 கோடிக்கு மேற்பட்ட நிதிகள் புலம்பெயர் மக்களால் உயிரிழை அமைப்புக்கு அனுப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணத்தில் மோசடி நடந்துள்ளது.

மாங்குளத்தில் அமைந்துள்ள பராமரிப்பு விடுதியில் 10 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் அங்கு இன்று வரை 6 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு ஒரு மாதம் 20 லட்சம் ரூபாய் செலவாக காட்டப்படுகிறது. இதுபோன்று கணக்கு காட்டப்பட்டு பணம் எடுக்கப்பட்டுகிறது. இந்த மோசடிகளுக்கு உரிய தீர்வு வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
