முல்லைத்தீவில் திடீரென மாயமான இளைஞர்: சடலமாக மீட்பு
புதிய இணைப்பு
முல்லைத்தீவு பகுதியில் நேற்று(24) இரவு காணாமல் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் தொலைபேசி மற்றும் காலணி ஆகியன கிணற்றுக்கு அருகில் கிடைத்ததை தொடர்ந்து, தேடுதல் தீவிரப்படுத்தும் போதே இளைஞரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில காணாமல் போன இளைஞரின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(25.01.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன இளைஞரை, வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
அதன் பின்னர், இளைஞர் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது தயார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணை
இவரது முறைப்பாட்டையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போன குறித்த இளைஞரின் வீட்டிற்கு அருகாமை உள்ள விடியல் விளையாட்டு மைதான கிணற்றில் அவரது தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காலணியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போன இளைஞர், புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவர் என்றும் தெரியவந்துள்ளது.




ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri