அரசியல் எதிரிகளையும் விமர்சகர்களையும் பழிவாங்க இன்டெர்போலை பயன்படுத்திய ரஷ்யா
விசில்புளோயர் (Whistleblower) மூலம் கசிந்த இன்டர்போலின்(Interpol) இரகசிய ஆவணங்கள், ரஷ்யா தனது அரசியல் எதிரிகளையும் விமர்சகர்களையும் பழிவாங்க சர்வதேச பொலிஸாரை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அரசியல் எதிரிகள், தொழிலதிபர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது போலி குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்களைக் கைது செய்ய 'ரெட் நோட்டீஸ்' (Red Notice) கருவிகளை ரஷ்யா பயன்படுத்துகிறது.
400-க்கும் மேற்பட்ட வழக்குகள் இரத்து
கடந்த 10 ஆண்டுகளில், இன்டர்போல் அமைப்பிடம் மற்ற நாடுகளை விட ரஷ்யா மீது தான் அதிக முறைப்பாடுகள் வந்துள்ளன. இது இரண்டாவது இடத்தில் உள்ள துருக்கியை விட 3 மடங்கு அதிகம்.

ரஷ்யா விடுத்த கோரிக்கைகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் முறையற்றவை எனக்கருதி இரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவும் உலகிலேயே மிக அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இகோர் பெஸ்ட்ரிகோவ் (Igor Pestrikov): என்ற வரத்தகர், உக்ரைன் போருக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரிக்கத் தனது நிறுவனம் பயன்படுத்தப்படுவதை எதிர்த்ததால், அவர் மீது நிதி மோசடி முறைப்பாடு சுமத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
சிவப்பு அறிக்கை வழங்கப்பட்டால், வெளிநாடுகளில் வங்கி கணக்குகள் முடக்கப்படும், வாடகைக்கு வீடு கிடைக்காது மற்றும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ வேண்டியிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ஈரானுக்கு இறுகும் நெருக்கடி... மத்திய கிழக்கில் போருக்குத் தயாராகும் அமெரிக்க விமானப்படை News Lankasri