வெளிநாட்டு ஆசை காட்டி இணையத்தில் பண மோசடி: பல்கலை உத்தியோகத்தர் கைது
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து இணையத்தில் பணமோசடியில் ஈடுபட்ட தெற்குப் பல்கலைக்கழகத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவரும் அவருடைய கணவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் உத்தியோகத்தராகக் கடமையாற்றும் பெண் அலுவலர் கனடாவுக்கு அனுப்புவதாக இணையத்தில் ஆசைகாட்டி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் 21 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.
பணம் கையாடல்
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தெற்கில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் தகவல் தொடர்பாடல் உத்தி யோகத்தராகக் கடமையாற்றும் மேற்படி பெண் அலுவலரை கைதுசெய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, மோசடி செய்யப்பட்ட பணத்தை கைதானவரின் கணவனும் கையாடல் செய்தமை தெரியவந்ததையடுத்து அவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் நேற்று முன்னிலைபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
