கொழும்பில் பாரிய தீ விபத்து: தீயை கட்டுப்படுத்த போராட்டம் - பலர் வைத்தியசாலையில் அனுமதி(Video)
புதிய இணைப்பு
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களுள் அறுவர் பலத்த தீக்காயங்களுக்கு உட்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக முன்னர் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் ஆடை விற்பனையகம் தவிர்ந்த ஏனைய சில கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாம் இணைப்பு
தீ விபத்திற்கு உள்ளான கட்டிடம் ஒரு ஆடை விற்பனையகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் வெள்ளிக்கிழமை என்பதன் காரணமாக, காலையில் ஊழியர்கள் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் தீப்பற்றியிருக்கலாம் என அருகிலுள்ளவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமையே முழு கட்டிடத்திற்கும் தீ பரவியமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தீ பரவலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அத்துடன் 15 பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் டில்ஷான் தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
இந்த தீ விபத்தில் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.
ஒரு சிலர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றும் பணிகளில் தீயணைப்பு மற்றும் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.










































6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

சத்யாவிற்கு ஊசி போடப்போன சிட்டி, முத்துவிற்கு வந்த போன், பிறகு.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் புரொமோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
