யாழில் தொடரும் பண மோசடி: பொலிஸார் விடுத்த எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் பெரும் பணக்காரர்களை இலக்கு வைத்து நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அது தொடர்பில் வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மோசடியில் ஈடுபடும் நபர்
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் உள்ள பணக்காரர்களை இலக்கு வைத்து அவர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தன்னை ஒரு மந்திரவாதியாக அறிமுகம் செய்வதுடன் குறித்த நபர்களுக்கு செய்வினை உள்ளதாக கூறி பண மோசடியில் ஈடுப்பட்டு வருகிறார்.
குறித்த நபர் தன்னால் செய்வினையை அகற்ற முடியும் என கூறி அவர்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் செயற்பட்டு முற்பணமாக ஒரு பெரும்தொகை பணத்தை தனது வங்கி கணக்கு வைப்பிலிடுமாறு கூறுகிறார்.
பின்னர் பணம் வைப்பிலிடப்பட்டதும் அவரது தொலைபேசி இலக்கம் செயலிழந்துவிடுகிறது.

இவ்வாறு குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு அவரின் பெயர் விபரங்கள் தெரியாததாலும், சிலர் தமது அந்தஸ்து கருதி முறைப்பாடு செய்ய முன் வராததால் அந்த நபரின் ஏமாற்று வேலைகள் தொடர்ந்து கொண்டே உள்ளதால் அது தொடர்பில் மக்களே விழிப்பாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan