கனடாவிலிருந்து வந்த அழைப்பு: நூதனமான முறையில் பண மோசடி
கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் உறவினர்களை கொண்ட நபர்கள் செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிகள் மூலம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நுண்ணறிவு குரல் மோசடியுடன் தொடர்புடைய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
இரவு நேரத்தில் 59 வயதுடைய பெண் ஒருவருக்கு, கனடாவில் இருக்கும் தனது மருமகனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது, நள்ளிரவில் ஏற்பட்ட விபத்திற்காக சிறையில் அடைக்கவுள்ளனர் என பேசியுள்ளார்.
டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி
அதற்காக, யாருக்கும் தெரியாமல் குறிப்பிட்ட தொகையை அனுப்புமாறும் தெரிவித்துள்ளார். இதனால், இரவு நேரத்தில் பதற்றமடைந்த அந்த பெண் 1.4 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் தான் மோசடி என்று அந்த பெண்ணிற்கு தெரிந்துள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தொலைபேசியில் பேசியவர், பஞ்சாபியில் மருமகனும், நானும் எப்படி பேசுவோமோ அதே போல பேசினார் என அந்த பெண் கூறினார்.
இது தொடர்பாக சைபர் நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி மையத்தின் செயல்பாட்டு இயக்குநர் பிரசாத் பதிபண்ட்லா பேசுகையில், "மோசடி குழுவினரால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்பு செயற்கை நுண்ணறிவு குரல் கருவிகள் மூலமாக ஒரு நபரின் குரலை மிக துல்லியமாக பிரதிபலிக்க முடிகிறது" என கூறியுள்ளார்.
இந்த மாதிரியான மோசடிகள் முக்கியமாக கனடா, இஸ்ரேல் போன்ற வெளிநாடுகளில் உறவினர்களை கொண்ட தனிநபர்களுக்கு தான் அதிகம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 23 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
