பாடசாலை நிகழ்வுக்கு அதிபரின் வங்கி கணக்கில் பல மில்லியன்: தகவல் அறியும் சட்ட மூலத்தில் உறுதி
தீவக கல்வி வலயத்தின் பிரபல்யமான ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் தீவகம் ஊர் புனித மரியாள் றோ.க மகளிர் வித்தியாலயத்தின் 2022ஆம் ஆண்டு 150வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களிடமிருந்து பல மில்லியன் ரூபா நிதியினை அதிபர் தனிநபர் வங்கி கணக்கின் ஊடாக மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஆண்டு விழா வாசிப்பின் போது கணக்கறிக்கை முறை கேடுகள் தொடர்பாக பெற்றோரால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் குறித்த பாடசாலை அதிபர் நிதி விடயம் தொடர்பில் உரிய பதில் வழங்கவில்லை.
இந்நிலையில் முறைகேடு தொடர்பில் வட மாகாண ஆளுநர் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் உரிய பதில் இதுவரை வழங்கப்படவில்லை.
பெற்றோர் தரப்பு சந்தேகம்
இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தீவக வலயக் கல்வி அலுவலக தகவல் வழங்கும் அலுவலரிடம் பாடசாலையின் 150வது ஆண்டுவிழா கணக்கறிக்கைகள் தொடர்பான தகவல்களை முறைப்பாட்டாளர் கோரி விண்ணப்பித்துள்ளார்.
பதில் வழங்கிய தீவக கல்விவலய தகவல் வழங்கும் அலுவலர் தங்களால் கோரப்பட்ட ஆவணங்கள் தனிப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு பெயர்களினூடாக மேற்கொள்ளப்பட்டமையால் இவை தொடர்பான தகவல்களை வழங்க முடியாதுள்ளது என உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் பாடசாலை நிகழ்வுக்காக தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் சேகரித்த அதிபருக்கு எதிராக வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது என பெற்றோர் தரப்பால் சந்தேகம் வெளியிடப்படுகிறது.


பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
