இன்றைய நாணய மாற்று வீதம்! வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய தினத்திற்கான உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதங்கள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளன.
நேற்றைய (30) தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலர்
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அவுஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் ஆகியவற்றிற்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
இருப்பினும், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மாறாமல் உள்ளது, அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 361.25 ரூபாவாகவும், விற்பனை விலை 371. 72 ரூபாவாகவும் அமைந்துள்ளது.