தவறான கணக்கு இலக்கங்கள்! வங்கியில் வைப்பிலிடப்பட வேண்டிய பணம் தொடர்பில் வெளியான தகவல்
ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட நிதியை 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும் அதில் சிக்கலொன்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி தவறான வங்கிக் கணக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டதன் காரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டவிருந்த 1300 மில்லியன் ரூபா பணம் மீள அனுப்பப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
தவறான கணக்கு இலக்கங்கள்
12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு ஹெக்டேருக்கு 10,000 ரூபா வீதம் 8 பில்லியன் ரூபாவும், இரண்டு ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் தவறான கணக்கு இலக்கங்கள் காரணமாக 1200 மில்லியன் ரூபா பணம் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளின் தவறுகளினால் விவசாயிகளுக்கு பணம் கிடைக்காதது தொடர்பாக விசாரணை இடம்பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

தயாரிப்பாளர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு, அதனால் அவர் என்ன செய்துள்ளார் பாருங்க- வைரல் போட்டோ Cineulagam
