உரிமையாளரிடம் கையளிப்பட்ட மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள்
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் தற்போது அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றது.
இதன்போது இடிபாடுகளுக்குள் இருந்து இராணுவத்தினர் கண்டுபிடித்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளரிடம் கையளிப்பு
இவ்வாறு மீட்கப்பட்ட 300,000 ரூபாய் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் என்பனவே அதற்கு சொந்தமான உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டு அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர், முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த பெறுமதியான பொருட்களைக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
மண்சரிவு காரணமாக முழுமையாக அழிந்துபோன ஒரு வீட்டின் இடிபாடுகளுக்குள் இருந்து குறித்தப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
அவற்றை நேற்றைய (14) உரிமையாளரிடம் இராணுவத்தினரால் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam