அரசியல்வாதிகளை புறந்தள்ளி ஒன்றிணைந்த சிவில் சமூக அமைப்புக்கள் (Photos)
பொருளாதார நெருக்கடியும் மக்களின் எதிர்காலமும் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று இன்று மட்டக்களப்பு அமெரிக்க மிக்ஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.
பிளேஜ் ரூ றீஸ்ரோர் பவுன்டேஷன் சமூகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்ற அமைப்பின் தலைவர் அ.சிவயோகநாதன் தலைமையில் சிவில் சமூக அமைப்புக்கள் பல்சமய அமைப்பு என்பன இணைந்து ஒரு மாற்றத்துக்கான கலந்துரையாடலாக இடம்பெற்றது.
உணவு பாதுகாப்பு தொடர்பான தற்போதைய எதிர்கால நிலை உணவுப்பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான யுக்திகள் எவை , எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் பேசப்பட்டன.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் மக்களை எவ்வாறு பாதுகாக்கலாம் இவ்வாறான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது போன்ற பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வுக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பலசமய ஒன்றிய தலைவர்கள்
அருட்தந்தையர்கள் எனப்பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri