மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா கோரிக்கை!
இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூடிய விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசாங்கத்திடம் கோரியுள்ளார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் மாகாணசபைத் தேர்தல்கள் துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென இந்தியா விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணசபைத் தேர்தல்
மேலும் மாகாணசபைத் தேர்தல்களை துரித கதியில் நடத்துமாறு கோரி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டங்களுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெற உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா கோரியதா என்பது குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
கடந்த சில மாதங்களில் மூன்று தேர்தல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam