மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் ஸ்டாலின் அதிருப்தி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய இலங்கைப் பயணம் தமிழ்நாட்டிற்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் கடற்றொரழிலாளர் பிரச்சினை குறித்த விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் கடற்றொரழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது கவலையளிக்கிறது என்றார்.
இலங்கை அதிகாரிகளால் தமிழக கடற்றொரழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், அது குறித்து விவாதிக்கவும் இந்தியப் பிரதமர் மோடியை அவர்கள் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
கடற்றொரழிலாளர்களின் வாழ்வாதாரம்
மேலும் கருத்து தெரிவித்த ஸ்டாலின்,
மோடி சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, தமிழக கடற்றொரழிலாளர்களின் துயரம் குறித்து எந்த முயற்சியும் எடுத்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.
தற்போது மொத்தம் 97 கடற்றொரழிலாளர்களும் அவர்களது படகுகளும் இலங்கையிக் தடுப்புகாவலில் உள்ளன.
இலங்கை அதிகாரிகளால் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதால் தமிழக கடற்றொரழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசு தமிழக கடற்றொரழிலாளர்களைப் புறக்கணித்தாலும், மாநில அரசு தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் இலங்கைப் பயணத்தை நேற்று முடித்தார். இலங்கையில் இருந்தபோது, பிரதமர் மோடி சனிக்கிழமை (05) ஜனாதிபதியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
இருதரப்பு பேச்சுவார்த்தை
இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர், இதில் ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் அடங்கும்.
பிரதமர் மோடி, ஒரு கூட்டு ஊடக சந்திப்பில் தனது கருத்துக்களின் போது, 'கடற்றொரழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னேற வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
கடற்றொரழிலாளர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்' என்று கூறினார்.
சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) கடற்றொரழிலை நிறுத்தவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடியின் தலையீட்டை தாம் கோரியதாக ஜனாதிபதி திசாநாயக்க கூறினார்.
இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 14 இந்திய கடற்றொரழிலாளர்களை இலங்கை விடுவித்தது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |