மோடியின் வருகை வடக்கு கிழக்கு மக்களுக்கு வாய்ப்பு! சாணக்கியன் வலியுறுத்து
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்திய எதிர்ப்பு என்ற மனநிலையில் இருந்து வெளியே வந்து பாரத பிரதமருடைய வருகையினை வடக்கு கிழக்கில் வாழும் மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று(03.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை அரசாங்கம் பாரத பிரதமர் ஊடாக இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். தென் மாகாணத்தை அவர்கள் அபிவிருத்தி செய்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை.
நிதி உதவி
இந்திய எதிர்ப்பு என்ற மனநிலையில் இருந்து வெளியே வந்து பாரத பிரதமருடைய வருகையை இலங்கையில் வாழும், குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எமது பலாலி விமான நிலையத்தை அதி சிறந்த ஒரு நவீன விமான நிலையமாக விஸ்தரிப்பு செய்வதற்கு இலங்கை நிதி கேட்டால் நான் அறிந்த வகையில் நிச்சயமாக அந்த நிதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தை ஒரு வர்த்தக மையமாக உருவாக்கக்கூடிய துறைமுகமாக மாற்றுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை கேட்டால் நிச்சயமாக பாரத பிரதமர் அதனை கரிசனையுடன் பார்ப்பார் என நான் நம்புகின்றேன்.
அத்துடன், தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் செல்லுகின்ற படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
