பிரதமர் பதவியில் இருந்து மோடி விலகல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பதவி விலகல் கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கையளித்துள்ளார்.
இந்த நிலையில், அவரது பதவி விலகல் கடிதம் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கூட்டணி ஆட்சி
இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17ஆவது மக்களவையை கலைக்க பரித்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது.
பிரதமர் மோடி பதவியேற்பு விழா வரும் 8ஆம் திகதி நடைபெறும் என முன்னதாக செய்தி வெளியாகியிருந்தது.
இதற்கிடையே, பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி விலகியுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவைச் சந்தித்த பிரதமர் மோடி தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.
அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, காபந்து பிரதமராக தொடரும்படி மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
You May Like This Video
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam