பாகிஸ்தான் விடயத்தில் ட்ரம்பை நிராகரித்த மோடி
காஷ்மீர் விடயத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தராக செயற்படுவதை நாம் விரும்பவில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசி மூலம் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இந்தியா அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த விடயத்தில் எந்தவொரு தரப்பினரும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தலையீடு
முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், போர் நிறுத்தம் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக இருந்த போதிலும் இதில் அமெரிக்காவின் தலையீடு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இதனையடுத்து, முப்படை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் இந்திய பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
பெரியளவிலான தாக்குதல்கள் இல்லை
இதனை தொடர்ந்தே, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுடன் மோடி கலந்துரையாடினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இதனையடுத்து, பாகிஸ்தான், சிறிய அளவில் அத்துமீறலில் ஈடுபட்டாலும் பெரியளவிலான தாக்குதல்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போர்நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து மீள் எழுப்பப்படும் ஓபரேஷன் சிந்தூர் விவகாரம்.. இந்திய அரசியல் தரப்பின் கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
