விதிகளை மீறிய மோடி - ராகுல் காந்தி: இந்திய தேர்தல் ஆணையம் அதிருப்தி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விதிமீறல் தொடர்பாக ஏப்ரல் 29ஆம் திகதி முற்பகல் 11 மணிக்குள், இருவரும் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்திடம் முறைப்பு
இந்நிலையில் மோடி, முஸ்லிம்களை நேரடியாகப் பெயரிடாமல், 'ஊடுருவிகள்' மற்றும் 'அதிக குழந்தைகளுடன் உள்ளவர்கள்' போன்ற சொற்களைப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன்படி இந்தியாவில் வறுமை அதிகரிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தவறான அறிக்கைகளை வெளியிட்டதாகவும், அவர் மீது "கடுமையான நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்றும் பாரதீய ஜனதா தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |