அவுஸ்திரேலிய சென்ற மனைவி, பிள்ளைகள் : இலங்கையில் கணவனின் மோசமான செயல்
தென்னிலங்கையில் குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு மதுபான தொழிலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்து தனது வீட்டில் பாரியளவில் மதுபான ஆலையை நடத்தியவரை காலி பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வடிகட்டப்பட்ட மதுபானம் மற்றும் அதனை வடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மதுபான ஆலை
காலி, போபே சபுமல் பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் இந்த பாரிய மதுபான ஆலை நீண்டகாலமாக இயங்கி வருகின்றது.
இச்சோதனையின் போது மதுபான ஆலையில் இருந்து 8.25,000 லிட்டர் கோடா, 66500 லிட்டர் காய்ச்சிய காசிப்பு, 2 இரும்பு பீப்பாய்கள், 8 பிளாஸ்டிக் பீப்பாய்கள், 2 எரிவாயு அடுப்புகள், 2 எரிவாயு சிலிண்டர்கள், 3 செப்பு சுருள்கள் மற்றும் 2 இரும்புச் சுருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரதான சந்தேக நபருக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், வழக்குப் பொருட்களும் காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
