இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களை சந்தித்த மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொழும்புக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, முன்னாள் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களை சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் சமூக ஊடகப்பதிவில் கருத்து வெளியிட்டுள்ள மோடி,
1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த அணி தன்னையும் எண்ணற்ற கிரிக்கெட் விளையாட்டு ஆர்வலர்களின் கற்பனையைக் கவர்ந்தது” என கூறியுள்ளார்.
முன்னாள் வீரர்கள்
குறித்த சந்திப்பில் முன்னாள் வீரர்களான அரவிந்த டி சில்வா மற்றும் சனத் ஜெயசூர்யா உட்பட வரலாற்று சிறப்புமிக்க அணியின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இருப்பினும், உலகக் கோப்பை வென்ற இலங்கை அணி தலைவர் அர்ஜுன ரணதுங்க தற்போது வெளிநாட்டில் இருப்பதால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
1996 ஆம் ஆண்டு இலங்கை அணி இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து வரலாறு இலங்கை அணி வரலாறு படைத்தது.
இது நாட்டின் கிரிக்கெட் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
