க்ளாஸ்கோவில் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துப் பேசிய மோடி!
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நட்பு ரீதியில் சந்தித்து பேசியுள்ளார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு ஸ்கொட்லாந்தின் - க்ளாஸ்கோ நகரில் இடம்பெறுகின்றது. இதில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ள அரச தலைவர்களை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நட்பு ரீதியாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Happy to have met you here in Glasgow, President @GotabayaR. pic.twitter.com/CXUIHLeysk
— Narendra Modi (@narendramodi) November 1, 2021
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri