உலகின் மிகவும் பிரபலமான தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவு
''மார்னிங் கன்சல்ட்'' என்ற பிரபல கருத்துக் கணிப்பில் உலகின் 'மிகப் பிரபலமான' தலைவராக 76% பெற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனை தலமையிடமாக கொண்ட உலகின் முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் சர்வதேச அளவில் மிகச் சிறப்பாக செயல்படும் தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றது.
இக்கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கமை உலகில் மிகச் சிறப்பாக செயல்படும் தலைவர்கள் பட்டியலில் 76% பேரின் ஆதரவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரேஸ்மானுவல் லோபஸ் ஒப்ரடோர் உள்ளார்.
நாட்டு மக்களிடம் கருத்துக் கணிப்பு
அந்த வகையில் கடந்த ஜனவரி 26 முதல் 31 ஆம் திகதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி தரவரிசை பட்டியலை ‘மார்னிங் கன்சல்ட்' வெளியிட்டுள்ளது.
இக்கருத்துக் கணிப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 40 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
அவருக்கு எதிராக 52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். தரவரிசை பட்டியலில் அவர் பின்தங்கி 7 ஆவது இடத்திலேயே காணப்படுகின்றார்.
மக்கள் செல்வாக்கு அதிகரிப்பு
பெரும்பாலான தலைவர்களுக்கு அவர்களது நாடுகளில் மக்கள் ஆதரவு குறைவாகவே உள்ளது.
எனினும் இந்திய பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. சர்வதேச அரங்கில் அசைக்க முடியாத தலைவராக அவர் உருவெடுத்து வருகிறார் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் 10 மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களின் முழு பட்டியல்
நரேந்திர மோடி (இந்தியா) 76%
ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (மெக்சிகோ) 61%
அந்தோனி அல்பானீஸ் (அவுஸ்திரேலியா) 55%
அலைன் பெர்செட் (சுவிட்சர்லாந்து) 53%
லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (பிரேசில்) 49%
ஜியோர்ஜியா மெலோனி (இத்தாலி) 49%
ஜோ பைடன் (அமெரிக்கா) 41%
அலெக்சாண்டர் டி குரூ (பெல்ஜியம்) 39%
ஜஸ்டின் ட்ரூடோ (கனடா) 39%
பெட்ரோ சான்செஸ் (ஸ்பெய்ன்) 38%
