தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்ட மோடி
தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று(05.04.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையில் கையாள ஒப்புக்கொண்டனர்.
பாதுகாப்பு நலன்கள்
அத்துடன், சட்டவிரோத கடற்றொழிலை தடுப்பதற்கு மோடியின் தலையீட்டை தான் கோரியதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை மோடி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்கள் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
