மோடி தலைமையிலான அமைச்சரவை: இலாக்காக்கள் அறிவிப்பு
பிரதமர் மோடி உட்பட 72 பேர் நேற்று(09) மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், இன்று(10) அவர்களின் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனுக்கும் கடந்த பதவிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட அதே துறைகள் இந்த முறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராகவும் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராகவும் தொடர உள்ளதுடன் எஸ். ஜெய்சங்கருக்கு மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காக்கள்
மேலும்,
பாதுகாப்பு அமைச்சகம் - ராஜ்நாத் சிங்
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி - சிவராஜ் சிங் சவுகான்
சாலைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நிதின் கட்கரி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பவர் புதியது ஆற்றல் - மனோகர் லால் கட்டார்
வர்த்தக அமைச்சகம் - பியூஷ் கோயல்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு - ஹர்தீப் சிங் பூரி
ரயில்வே மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு- அஸ்வினி வைஷ்ணவ்
கல்வி அமைச்சகம் - தர்மேந்திர பிரதான்
சுகாதார அமைச்சகம் - ஜேபி நட்டா
தொழிலாளர் மற்றும் விளையாட்டு - மன்சுக் மாண்டவியா
சுற்றுச்சூழல் அமைச்சகம் - பூபேந்திர யாதவ்
சிவில் ஏவியேஷன் - ராம் மோகன் யாதவ்
நாடாளுமன்ற விவகாரங்கள் - கிரண் ரிஜிஜு
MSME - ஜிதன் ராம் மஞ்சி
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் - சர்பானந்தா சோனோவால்
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் - சிராக் பாஸ்வான்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |