ரஸ்ய சந்திப்பில் இந்திய - சீன அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள உடன்படிக்கை
இந்தியாவும் சீனாவும் எல்லையில் உள்ள கிழக்கு லடாக்கின் இராணுவ நிலைப்பாடு தொடர்பில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.
இந்தநிலையில், இந்தியா மற்றும் சீனாவின் சிறப்புப் பிரதிநிதிகள் எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான, மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை ஆராய்வதற்காக விரைவில் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் இன்று (23) ரஸ்யாவில் பிரிக்ஸ் மாநாட்டுக்கு புறம்பாக நடத்திய தங்கள் சந்திப்பின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
மோதல் சம்பவம்
இதற்கமைய, எல்லைப் பகுதிகளில் அமைதியை நிர்வகிக்கும பணிகளையும் இந்த சிறப்பு பிரதிநிதிகள் மேற்பார்வையிடுவார்களென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் கல்வான் பகுதியில் சீனப் படைகளுடன் நடந்த மோதலில் சுமார் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதால், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பெரும் தாக்கம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் மோடி மற்றும் ஸி ஆகியோருக்கு இடையே நடந்த முதல் சந்திப்பு இதுவாகும். இதன்போது எல்லையில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வேறுபாடுகளை அனுமதிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பினது சீனாவின் தலைமைப் பதவிக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |