டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி

Ranil Wickremesinghe Sri Lanka Economy of Sri Lanka
By Kamel Jan 26, 2023 09:50 PM GMT
Report

நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் இலங்கையில் நடத்தப்படவுள்ள "புதிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி" தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி | Modern Technology Promote Digital Economy

 டிஜிட்டல் பொருளாதாரம்

இந்த நாட்டில் உள்ள தொழில்களை புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்த டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றுவதனை எவ்வாறு ஊக்குவிப்பது என்பதனை அடையாளங்காண்பதன் மூலம், தற்போதைய நெருக்கடியை வெற்றிகொள்ளவும், உற்பத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்களை கண்டறிவதே இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து ஒரு ஏற்றுமதி மையமாக இலங்கையை மாற்றுதல், சேவை மற்றும் ஏற்றுமதி துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் நிலையை ஏற்படுத்துதல்,உள்நாட்டுக் கைத்தொழிலுக்காக சிறந்த சர்வதேச நடைமுறைகளைக் கொண்டு வருதல் மற்றும் முன்னணி தொழில்துறையினருடன் வலையமைப்பை ஏற்படுத்துதல் என்பன இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி | Modern Technology Promote Digital Economy

சைபர் பௌதீக கட்டமைப்பு (Cyber-Physical Systems), இணையத் தகவல் ( (Internet of Things), இணைய சேவைகள் (105), ரோபோ தொழில்நுட்பம் ((Robotics), பாரிய தரவு (Big Data), கிளவுட் கணனி மற்றும் உற்பத்தி (Cloud Computing & Manufacturing), மேம்படுத்தப்பட்ட யதார்த்தம்(augmented reality) மேம்படுத்தப்பட் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற தொழில் நுட்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இந்த புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தொழில்துறை துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் என்பன இந்தக் கண்காட்சி ஊடாக அறிமுகம் செய்யப்படவுள்ளன.

பல்வேறு துறைகளினூடாக டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியை அடைவதன் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள சமூகப்படித்தரங்களைச் சேர்ந்த இனக் குழுக்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்கி, அதன் ஊடாக சமூகத்தை வலுப்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கண்காட்சியின் ஏற்பாடுகள் யாவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் நிதி, வெளிவிவகாரம், கைத்தொழில், கல்வி, போக்குவரத்து, வர்த்தகம், விவசாயம் உள்ளிட்ட 13 அமைச்சுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய வழிநடத்தல் குழுவினால் முன்னெடுக்கப்படும். தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உள்ளிட்ட தொடர்புள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை முதலீட்டுச் சபை, வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US