கிளிநொச்சியில் நவீன தொழில்நுட்ப வயல் அறுவடை விழா
விவசாயிகளிடத்தே நெற்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கு மாகாண விவசாயத்திணைக்களம் மேற்கொண்டு வருகின்ற வயல் அறுவடை விழா கிளிநொச்சியில் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு, வட்டக்கச்சி பகுதியில் நேற்று(02) நடைபெற்றுள்ளது.
நெல் விதைப்பு நவீன முறையான பரசூட் முறையில் விதைக்கப்பட்ட AT 307என்ற வெள்ளை நெல் அறுவடை விழா இதன்போது நடாத்தப்பட்டுள்ளது.
பாடவிதான உத்தியோகத்தர்
பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் தட்சணாமூர்த்தி யோகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி, பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


