பாரதிபுரம் செபஸ்தியார் கிராமிய வீதியை பார்வையிட்ட தேசிய மக்கள் சக்தியில் அமைப்பாளர்
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாரதிபுரம் செபஸ்தியார் கிராமிய வீதியை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியில் அமைப்பாளர் மருங்கன் மோகன்"நேரில் சென்று"பார்வையிட்டு புனரமைக்க நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வீதியானது வழமைக்கு மாறாக ஏற்படும்" மழைகாரணமாக மோசமாக பாதிப்படைந்துள்ள பாராதிபுரம்" செபஸ்தியார்"வீதியை மாவட்ட தேசிய மக்கள் சக்தி அமைப்பாளரும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இணைப்பு செயலாளர் மருங்கன் மோகன் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழு இணைப்பாளர் ந.ஜினோத். கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்"தோழர் சஜீவன் மற்றும் கரைச்சி பிரதேச உறுப்பினர் தோழர் ஜெ.ரொசந்தினி அவர்களிற்கு பாரதிபுரம் மக்களால் வழங்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நேரில் சென்று ஆராய்ந்து கொண்டனர்.
பாரதிபுரம், மலையாளபுரம். மக்களின் பிரதனமாக பொதுப்போக்குவரத்து வீதியாக இவ் வீதி காணப்படுவதுடன். மழைக்காலங்களில் பாரிய பிரச்சனைகளை மக்கள் எதிர்நோக்குகின்றனர்.
ஆகவே" இவ் வீதியை தேசிய கிராமிய"பாதை அபிவிருத்தி நிகழ்ச்சி"திட்டத்தின்"கீழ் ஒதுக்கீடுகளில் துரிதமாக புனரமைத்து"தருவதாகவும் அதற்குரிய தேவையான நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட அமைப்பாளரும்"கடற்றொழில்"அமைச்சரின் இணைப்பு"செயலாளர் மருங்கன் மோகன் குறிப்பிட்டிருந்தார்