உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்ற நோர்வூட் பிரதேச சபை தலைவர்!
நோர்வூட் பிரதேச சபை தலைவர் பிரான்சிஸ் ஹெலன் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
நோர்வூட் பிரதேச சபை செயலாளர் முரளிதரன் முன்னிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் பிரான்சிஸ் ஹெலன் மற்றும் ஜக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் நடராஜ் சிவகுமார் ஆகியோர் இன்று காலை, உத்தியோப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
பேரணி
அவர்கள் டியன்சின் நகர மையத்திலிருந்து நோர்வுட் பிரதேச சபை வளாகத்திற்கு பேரணியாகச் சென்று அனைத்து மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்தின் கீழ் கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் கட்சியின் நோர்வூட் தேர்தல் அமைப்பாளர் லலித் சுரவீர, உயர்பீட உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தேர்தல் அமைப்பாளரும் அம்பகமுவ பிரதேச சபையின் தலைவருமான கபில நாகந்தல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



