மோதர கடற்றொழில் துறைமுக குத்தகை வழக்கு: ராஜிதவுக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் கடற்றொழில்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மோதர கடற்றொழில் துறைமுக குத்தகை வழக்கின் சாட்சியப் பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் இன்று (17.11.2026) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2012ஆம் ஆண்டு மோதர கடற்றொழில் துறைமுகத்தைத் தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு
வழக்கின் இரண்டாவது பிரதிவாதி உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனைக் கருத்திற்கொண்ட நீதிமன்றம், இன்று நடைபெறவிருந்த சாட்சியப் பதிவை ஒத்திவைத்து, வழக்கை எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
வழக்கில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது அரச தரப்பு சாட்சிகள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.