இன்று நள்ளிரவு முதல் மீண்டும் தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு
கட்டண அதிகரிப்பு
தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.
அதன்படி இந்த கட்டண உயர்வு இன்று (05.10.2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
புதிய வரி சேர்ப்பு
புதிய வரி 2.5% ஐ சேர்க்கும்போது, தொலைக்காட்சி சேவைகள், முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு கட்டணங்கள் திருத்தப்பட்டுவதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதேவேளை புதிய கட்டண விபரங்கள் தத்தமது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், கடந்த மாதம் தொலைபேசி, கையடக்க தொலைபேசி மற்றும் செய்மதி தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri