கையடக்க தொலைபேசி பாவனை - சிறுவன் எடுத்த விபரீத முடிவு
திருகோணமலை பகுதியில் பெற்றோர் கண்டித்தமையினால்15 வயது சிறுவன் அதிக மாத்திரைகளை உட்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்யாணபுர பகுதியில் இன்று (20) இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இவ்வருடம் க/பொ/த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவன் தொடர்ச்சியாக கையடக்க தொலைபேசியை பாவித்து வருவதாகவும், படிக்கின்ற நேரத்தில் படிக்குமாறு தாயார் கூறி மகனை தாக்கியதாகவும், இதனையடுத்து மகன் வீட்டிலிருந்த மாத்திரைகளை உட்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள தற்கொலை முயற்சி
இதனையடுத்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருவண்ணாமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கையடக்க தொலைபேசி பாவனை காரணமாக சிறுவர்கள் அதிகளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam

23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam
