சிறைக்குள் ரிசாட்டுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்
மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு்ள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனிடம் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி தொடர்பில் ஆராய்வதற்காக புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிசாட், அண்மையில் அவரது வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பான வழக்கிலும் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது அவரது சிறைக்கூடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொலைபேசி தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்து வரும் ரிசாட்டுக்கு இந்த தொலைபேசி விவகாரம் மேலும் சிக்கலைத் தரக் கூடியது என் தெரிவிக்கப்படுகின்றது.