ஜே.வி.பி மீதும் அரசாங்கம் மீதும் எம்.கே சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு (video)
கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கையில் சுனாமி ஏற்பட்ட போது அரசாங்கம் மீதும் மக்கள் விடுதலை முன்னணி மீதும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
நேற்று (26.12.2022) சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சுனாமி நிவாரண கட்டமைப்பை மக்கள் விடுதலை முன்னணி நீதிமன்றம் மூலம் இரத்து செய்ததாகவும், அதற்கு பிரதான காரணமாக கிளிநொச்சியில் தலைமையகம் இருந்ததே காரணம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவின் மோசடி
தற்போதும் சுனாமியால் இழப்புக்களை சந்தித்த மக்களுக்கு சரியான அபிவிருத்தி இல்லை என தெரிவித்துள்ளார்.
அதற்கு காரணம் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்குரிய நிதியினை
ஹெல்பிங் அம்பாந்தோட்டை மூலம் மோசடி செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
