மித்ர சக்தி கூட்டுப்பயிற்சியை பார்வையிட்டுள்ள இந்திய – இலங்கை இராணுவத்தளபதிகள்
பாரிய இலங்கை - இந்திய இராணுவ கூட்டுப்பயிற்சியான மித்ர சக்தி பயிற்சியை இந்திய இராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே மற்றும் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் இன்று (15) பார்வையிட்டுள்ளனர்.
பிராந்திய சமாதானத்திற்காக கூட்டுப்பணி மூலம் இயங்கு திறனை வலுவாக்குதல் என்ற தொனிப்பொருளில் மித்ர சக்தி கூட்டுப் பயிற்சி இலங்கையில் இடம்பெற்றது.
இந்த பயிற்சியின் இறுதிக்கட்டம் இன்று மாதுரு-ஓயா இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது.
ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் இறுதி பயிற்சி நடவடிக்கையை கண்காணித்தனர்.
இரண்டு வாரங்களாக இடம்பெற்ற மித்ர சக்தி இராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவப் படையினர் 120 பேரும் இலங்கை இராணுவத்தின் 120 பேரும் பங்கேற்றனர்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam