தெஹிவளை குண்டுவெடிப்பு: விசாரணையில் சிக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்
தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் பொலிஸாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அதிகாலை, தெஹிவளை சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டு வெடித்ததில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெஹிவளை குண்டுத்தாக்குதல்
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர்களின் தந்தையின் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகக் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்ட வீடும், தாக்குதலுக்கு உள்ளான வீடும் ஒரே ஒரு சுவரால் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்ததால், தவறுதலாக இந்த குடும்பத்தின் மீது குண்டு வீசப்பட்டதாகக் கைதான நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “கொஸ் மல்லி” என்ற தனது உறவினர் மற்றும் போதிய வத்த பகுதியைச் சேர்ந்த “அவிஷ்கா” ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதலை நடத்தியதாகச் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியின் நிறத்தை மாற்றுவதற்காகக் கேரேஜ் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டதைக் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணையில் வெளிவந்த இரகசியம்
வாகனத்தைக் கேரேஜில் ஒப்படைத்த நபர் மற்றும் கேரேஜ் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 10 இரவு 9 மணியளவில், களுபோவில சரணங்கர வீதியைச் சேர்ந்த ஹிருத்ம ஷாஷ்மிக என்ற “ஹிரு மல்லி” மற்றும் தாக்குதலை நடத்திய மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ என்ற “மது” ஆகியோர் அந்த முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆகஸ்ட் 1 ஆம் திகதி இரத்மலானை கண்டவல வீதியில் “ஜதுங்க பிரியந்த” என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் மது என்பவரே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தற்போது தாக்குதலை நடத்திய நபர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவரை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் நீதிமன்ற அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மாரியம்மன் ஆலயத்திற்காக விறகு தேட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி - 5 நாட்களுக்கு பின் வந்த தீர்ப்பு