மாரியம்மன் ஆலயத்திற்காக விறகு தேட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி - 5 நாட்களுக்கு பின் வந்த தீர்ப்பு
திருகோணமலை - தம்பலகாமம், சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற இளைஞர்கள் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக 41 இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.
41 பேர் கைது
இதன்போது, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் 41 பேரும் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அவர்கள் ஏற்றி சென்ற பெட்டியுடனான இரண்டு உழவு இயந்திரங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட அனைவரும் கந்தளாய் நீதவான் நீதிமன்றினால் சொந்த பிணையில் கடந்த வியாழக்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றயதினம் (15/09/2026) குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களும் நீதவான் மன்றினால் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி நிருஷ் ஆகியோர் முன்னிலையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.