கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய 12 வயது சிறுமி! மூங்கிலாற்றில் சம்பவம் (Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூங்கிலாறு வடக்கு பகுதியில் 12 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு நித்திரை கொள்ளச் சென்ற குறித்த சிறுமி அதிகாலையில் வீட்டிலிருந்து காணாமல் போனாதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை
வீட்டிலிருந்த பணம், தந்தையின் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ள நிலையில், தன்னை தேடவேண்டாம் என கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த மாணவி டிக்டக்கில் அண்மையில் தொடர்பிலிருந்ததாகவும் ஹட்டன் பகுதியினை சேர்ந்த நண்பன் ஒருவரைக் காதலித்துள்ளதாகவும் டிக்டக் தகவலின் படி மாணவி காதலனைத் தேடிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை மாணவியின் தொடர்பு ஒருதடவை கிடைத்துள்ளதாகவும் மேற்கொண்டு தொடர்பு கிடைக்கவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
12 அகவையுடைய மாணவி இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை கிராமத்தில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏற்கனவே பேசு பொருளாக காணப்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் இவ்வாறான சம்பவங்கள் தங்களை மேலும் கவலைகொள்ளச் செய்துள்ளதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

நிலாவிடம் வம்பிழுத்தவர்களை தரமான சம்பவம் செய்த குடும்பத்தினர்.. அய்யனார் துணை தெறிக்கும் எபிசோட் Cineulagam
