எங்களுக்கு நீதி இன்னும் வெகுதொலைவில்..!

Missing Persons Sri Lankan Tamils Government Of Sri Lanka
By Parthiban Jan 29, 2025 11:25 AM GMT
Report

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டுமென்ற 'எந்த பொறுப்பும்' எந்த ஒரு ஆட்சியாளருக்கும் இல்லையென, வலிந்து காணாமல் போன கணவருக்காக தனது தளராத போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் சர்வதேச விருது பெற்ற மனித உரிமை ஆர்வலர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

"எங்களுக்கு நீதி இன்னும் வெகு தூரத்தில், நீதி வருமென தெரிகிறது. நீதி வழங்கப்படுவதாகக் கேட்கிறோம். ஆனால் அந்த நீதி இன்னும் வெகு தொலைவில் உள்ளது.

நான் மாத்திரமல்ல, இந்த நாட்டில் இறுதிக் கிரியைகளை இழந்தவர்கள் ஏராளம். வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு என அனைத்து இடங்களிலும், தங்கள் அன்புக்குரியவர்களுக்காக பெண்கள் இன்னும் தரையில் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ஆனால் இன்னும் இந்நாட்டில் மாறிவரும் ஆட்சியாளர்கள் எவரும் நீதியைப் பற்றிய கரிசனை இல்லை.

மகிந்தவுக்கு இது தகுதியல்ல! வீட்டில் இருந்து ஒழுக்கமாக வெளியேறுமாறு அறிவித்த அரசாங்கம்

மகிந்தவுக்கு இது தகுதியல்ல! வீட்டில் இருந்து ஒழுக்கமாக வெளியேறுமாறு அறிவித்த அரசாங்கம்

நீதிக்கான போராட்டம்  

எனவே, நாம் இயற்கைக்கு திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் எங்களுக்கு உதவக்கூடியவர்களை நாடி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.”

எங்களுக்கு நீதி இன்னும் வெகுதொலைவில்..! | Missing Persons Sri Lanka People Request Justice

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நவகமுவ பத்தினி ஆலயத்தில் கண்ணகி பூசையை நடத்திய, ஒன்றரை தசாப்த காலமாக நீதிக்காக போராடி வரும் சந்தியா எக்னெலிகொட ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 16ஆவது வருடத்திற்கு முன்னர் அவரை வலிந்து காணாமல் ஆக்கிய குற்றவாளிகளை தண்டிக்குமாறு நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். “2026 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதிக்கு முன்னர் குற்றவாளிகளை தண்டிக்க இந்த நாட்டின் ஆட்சியாளர்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்.

எங்களுக்கு நீதி இன்னும் வெகுதொலைவில்..! | Missing Persons Sri Lanka People Request Justice

இந்த நாட்டில் நீதிக்காக வீதியில் செல்லும் மக்களுக்கு நீதி வழங்குங்கள். அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, நமது மக்களுக்கு நீதி கிடைக்கும்போது, இந்த நாட்டின் சுதந்திர குடிமக்களாக நாம் சுவாசிக்க முடியும்.” ஒன்றரை தசாப்தங்களாக நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் சந்தியா எக்னெலிகொட இதன்போது நன்றி தெரிவித்தார்.

மகிந்தவுக்கு பாதிப்பென்றால் நாட்டில் கலவரம் வெடிக்கும்! அரசை எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

மகிந்தவுக்கு பாதிப்பென்றால் நாட்டில் கலவரம் வெடிக்கும்! அரசை எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

முந்தைய கிளர்ச்சிகள் 

“இந்த மறுமலர்ச்சி அரசாங்கம் எமக்கு நீதி வழங்கும் என்றும் உண்மையான மறுமலர்ச்சியைக் காட்டி நாட்டை மாற்றும் என்றும் நாங்கள் நினைக்கிறோம். இன்று முதல் இந்த நாட்டின் நீதிமன்றங்களில் என்ன செய்ய வேண்டியிருக்கிறது? நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

எங்களுக்கு நீதி இன்னும் வெகுதொலைவில்..! | Missing Persons Sri Lanka People Request Justice

இந்த 15 வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.” ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்.

2017ஆம் ஆண்டில், இலங்கையில் போர் மற்றும் முந்தைய கிளர்ச்சிகளில் இருந்து காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களின் உறவினர்களின் அடையாளமாக மாறிய ஒரு பெண்ணாக சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்காவின் உலகின் துணிச்சலுக்கான விருது வழங்கப்பட்டது.

காணாமல் போன கணவர் பிரகீத் எக்னெலிகொட குறித்த உண்மையை வெளிக்கொண்டு வர அதிகாரிகள் ஏற்படுத்திய தடைகளையும் மீறி 80 தடவைகளுக்கு மேல் நீதிமன்றம் சென்று சந்தியா காட்டிய தைரியமே விருதுக்கு தெரிவானதற்கு காரணம் என அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் தோமஸ் ஏ ஷெனன் தெரிவித்திருந்தார். 

வெளிநாடு செல்வதற்கு இரவிரவாக வீதியில் தஞ்சமடைந்துள்ள மக்கள்! வெளியான காணொளி

வெளிநாடு செல்வதற்கு இரவிரவாக வீதியில் தஞ்சமடைந்துள்ள மக்கள்! வெளியான காணொளி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 29 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US