இந்த அரசாங்கம் படைத்துள்ள சாதனை: மார் தட்டிக் கொள்ளும் ஜனாதிபதி
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகளில் இனவாதப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் மட்டுமே இனவாத அடிப்படையிலான பிரச்சினைகள் ஏற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல் தடவையாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இனவாத அடிப்படையிலான பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இனவாதத்தை போஷித்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில அரசாங்கள் சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும் முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கும் ஒரே கணக்கிலிருந்து பணம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
ஓரே வங்கிக் கணக்கிலிருந்து சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும், முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கும் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களை ஒன்றிணைத்து ஆட்சி செய்வதனை தவிர்த்து பிரித்தாளும் ஓர் முறையை கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இனவாதத்தை தூண்டி, மக்களை நாய்களைக் போன்று கடித்துக் கொள்ளச் செய்த அரசாங்கங்களே கடந்த காலங்களில் ஆட்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்படவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri