இலங்கையின் பகல் நேர வெப்பநிலை! சுமார் ஒரு வாரத்திற்கு பதிவாகப்போகும் நிலைமை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் பகல் நேர வெப்பநிலை தொடரலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணியில் உள்ள வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பல பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்யும் நிலை காணப்படுகிறது.இருந்த போதிலும், தற்போது நிலவும் வெப்பமான வானிலை தொடரும்.
பகல் நேர வெப்பநிலை
இந்த நிலைமை சுமார் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் சாத்தியம் காணப்படுகிறது. இதேவேளை இரவு நேர வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பகல் நேர வெப்பநிலை தொடரலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போது நிலவும் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
வறண்ட வானிலை
அத்துடன் மொனராகலை, அம்பாறை, அநுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இவ்விரு மாவட்டங்களில் மொனராகலை மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வறண்ட வானிலை காரணமாக பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,13,354 மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri