காணாமல் போனவர்களின் உறவுகளினால் சர்வதேசத்திடம் நீதி கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணிக்குச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது, எங்கே எங்கே உறவுகள் எங்கே, கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பியிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கருத்து தெரிவிக்கையில், உள்ளூரில் போராடிய நாங்கள் இப்போது சர்வதேசத்திடம் நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இனியும் காலம் கடத்தாது எமது உறவுகளுக்கு நீதி வேண்டும். கோவிட் - 19 காலத்திலும் எமது உயிர்கள் போனாலும் பரவாயில்லை எமது உறவுகள் தான் வேண்டும்.
எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் மாதம் மாதம் சட்டங்களை மதித்துப் போராடி வருகின்றோம்.
சர்வதேசமே கண்விழித்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என கேட்டு நிற்கின்றோம் என கோரியுள்ளனர்.










ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
