காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் நிர்வாகத் தெரிவு
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் நேற்று(20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
வலிந்து காணப்பட்ட உறவுகள் தமது உறவுகளை தேடும் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது சங்கங்களின் தலைவர் செயலாளர் உள்ளிட்டோரை தெரிவு செய்தனர்.
நிர்வாகத் தெரிவு
இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் வடக்கு கிழக்கின் தலைவி யோகராஜா கனகரஞ்சினியும், செயலாளராக சி. ஜெனிற்றாவும் தெரிவு செய்யப்பட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவராக சி. இளங்கோதை, மட்டக்களப்பு மாவட்டம் வ.அமலநாயகி, அம்பாறை மாவட்டம் வ.செல்வராணி, திருகோணமலை மாவட்டம் எஸ்.செபஸ்ரியான்தேவி, வவுனியா மாவட்டம் சி.ஜெனிற்ரா, முல்லைத்தீவு மாவட்டம் ப.வீரமணி, கிளிநொச்சி க.கோகிலவாணி, மன்னார் மாவட்டம் கு.உதயசந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
நிர்வாகத் தெரிவு இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தலைவி கனக ரஞ்சனி,
தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய போராட்டம் 15 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் எமது நீதிக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
எமது சங்கத்தில் கடந்த காலங்களில் சில பிளவுகள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டமை உண்மை அதனை சரி செய்து புதிய நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்துள்ளோம்.
எமது புதிய நிர்வாகத்தில் மன்னார் மாவட்ட தலைவியாக தெரிவு செய்யப்பட்ட உதயச்சந்திரா தனது சுகயீனம் காரணமாக விலகுவதாக தெரிவித்துள்ள நிலையில் குறித்த மாவட்டத்துக்கான தலைவியை விரைவில் தெரிவு செய்வோம்.
ஆகவே எமது புதிய நிர்வாகம் வடக்கு கிழக்கு சார்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக செயல்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 20 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
