காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம்: ஊடகவியலாளர்கள் யாழில் விசேட கலந்துரையாடல்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகள் மற்றும் யாழ். ஊடகவியலாளர்ககளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகங்கள் பின்பற்றும் நடைமுறைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.
தவறிய நடவடிக்கைகள்..
குறித்த கலந்துரையாடலில் மன்னார் சதொச மனிதப் படுகுழி, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் படுகுழி, செம்மணி மனிதப் படுகுழி உள்ளிட்ட விவகாரங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளத் தவறிய நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
அத்துடன், குறித்த அலுவலகத்தின் ஒட்டுமொத்தமான நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஓஎம்பி அலுவலக நிர்வாகிகளால் விளக்கம் அளிக்கப்பட்டது.
காணாமல் போனவர்கள் பற்றிய அலுவகத்தினுடைய பேரவை உறுப்பினர், நீதியமைச்சு, FAFG எனப்படும் கௌதமாலாவில் இருந்து இயங்கும் மானுடவியல் குறித்த அமைப்பு ஆகிவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
