மாபெரும் போராட்டத்திற்கு வடக்கு - கிழக்கு மக்களுக்கு அழைப்பு
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கின் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள போராட்டத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை பத்து மணிக்கு யாழ் கிட்டு பூங்கா முன்பாக இடம்பெறவுள்ளது.
மக்களுக்கு அழைப்பு
“சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு வலுச்சேர்ப்போம் வாரீர் ” என்ற தொனியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழர்களுக்கு எந்த வித நீதியும் உரிமைகளும் கிடைக்காமையால் சர்வதேச நீதி பொறிமுறை ஊடாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும் இனிவரும் காலங்களில் இப்படியான ஆட்கடத்தல் சம்பவங்கள் மீள் நிகழாமையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர்களாக ஒருமித்து குரல்கொடுக்க அனைவரம் ஒத்துழைக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு என்பதே வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட செயற்பாடாகும்.அதற்கான நீதிப்பொறிமுறையை இந்த நாட்டில் கிடைக்காது என்பதன் காரணத்தினாலேயே சர்வதேச நீதிப்பொறிமுறையினை கோரி நிற்கின்றோம்.
இதனை வலியுறுத்தி எதிர்வரும் 30ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும்போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெறவுள்ள சர்வதேச நீதிகோரிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஊடக சந்திப்பு இன்று(26) சந்திவெளியில் நடைபெற்றது.
வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சு.சுதாகரன்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர் செ.நிலாந்தன்,வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சிவராசா ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.
மேலதிக தகவல் - கிருஸ்ணகுமார்






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
